Deivathin Kural ("தெய்வத்தின் குரல்")
- Nov 7, 2017
- 1 min read
ஶ்ரீ சங்கராபுரத்துக் கோயில் - "தெய்வத்தின் குரல்"
(509) 07.11.2017
பரோபகாரம் - பகுதி 33 _________
ஆவி பிரியும் காலத்தில் உடம்பு போன பிறகு அது என்ன ஆகிறது ?
எல்லா உயிர்களும் உடனே பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடுகிறதா ?க்ருஷ்ண பரமாத்மா அப்படிச் சொல்லவில்லை.
அந்த உயிர் அதன் கர்மத்தைப் பொறுத்து இன்னோர் உடம்பில் புனர்ஜன்மம் எடுக்கிறது என்றுதான் சொல்லுகிறார். _________
'ரொம்ப ஸுலபமான வழியாக இருக்கே.
வாழ்க்கை முழுக்க எப்படிக் குட்டிச்சுவராக நடத்தினாலும் அந்திம ஸமயத்தில் மட்டும் பகவானை நினைத்துக் கொண்டால் போதுமாமே !அதனாலேயே இந்த ஜனன - மரணச் சக்ரத்திலிருந்து தப்பித்துக்கொண்டு விடமுடியுமாமே !' என்று தோன்றுகிறது.
ஆனால் பகவான் இங்கே 'பொடி' வைத்துப் பேசுகிறார்.
'கடைசிக் காலத்தில் என்னை நினைத்துக் கொண்டு' என்பதற்கு
'அந்தகாலே மாம் ஸ்மரன்' என்று சொன்னால் போதும்.
ஆனால் பகவான் அப்பபடச் சொல்லவில்லை.
'அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரன்'
என்று ஒரு 'ச' வும் 'ஏவ' வும் போட்டு ஸம்ஸார நிவ்ருத்தி இத்தனை ஸுலபமில்லையப்பா என்று ஆக்கியிருக்கிறார் !
இந்த 'ச' வுக்கும் 'ஏவ' வுக்கும் என்ன அர்த்தம் ?
'அந்த காலே 'ச' என்றால் 'சாகிற ஸமயத்திலும்' என்று அர்த்தம்.
'மாம் ஏவ' என்றால் 'என்னை' என்று மட்டும் அர்த்தமில்லை;
'என்னை மட்டுமே' என்று அர்த்தம்.
அவரை மட்டுமே அந்திமத்திலும் 'ஸ்டெடி'யாக ஸ்மரிக்க வேண்டும்.அப்போதுதான் மோக்ஷம். _________
சாகத்தான் போகிறோம் என்று முதலில் தெரியவேண்டும்.
அதற்கப்புறம் அதற்காக பயந்து நடுங்காமல், புத்தியை நன்றாகத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட தெளிவோடு, இந்தக் க்ஷணம் உயிர் போகிறது என்றால்கூட அந்த ஒரு க்ஷணத்திலாவது, ஒருமுகமான சிந்தனையோடு பகவானை மட்டுமே நினைக்க வேண்டும்.
அப்படி ஒரே க்ஷணத்தில் பிராணன் போய்விட்டால் நல்லது.
பகவானை விட்டு ஸ்மரனை நகராதபோதே உயிரைவிட்டு, அவனிடமே போய்ச்சேரலாம்.
ஆனால் இப்படி யாரும் சாகக்காணோமே!
ஶ்ரீமஹாபெரியவா


Comments