Thulasi
- Nov 7, 2017
- 3 min read
துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன்.
காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
(துளசி கட்டை வேண்டும் என்பதற்காக துளசி செடியின் கிளையை ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம். காய்ந்த துளசி செடியிலிருந்து அதை சேகரிக்கலாம்)
பத்மபுராணத்தில் இன்னொரு காட்சி.
முருகன்; ”அப்பா, எந்த தாவரத்திலிருந்து தெய்வ பக்தி பெருகுகிறது?
சிவன்:”என் அன்புச் செல்வா ,ஆறுமுகா, துளசி ஒன்று தானடா அந்த தெய்வீகம் கொண்டது. கிருஷ்ணனுடன் நெருங்கியதல்லவா அது.
உலகில் வெகு காலம் முன்பு, கிருஷ்ணன் பிருந்தா தேவியை பூலோகத்தில் பித்ருக்களுக்கான திருப்திகர சேவைக்காக துளசியாக அறிமுகப் படுத்தினார். எதை அளித்தாலும் சிறிது துளசி இல்லாவிட்டால், கிருஷ்ணன் அதை ஏற்பதில்லை.
தினமும் துளசி தளத்தால் கிருஷ்ணனை அர்ச்சிப்பவன் வேறு எந்த புண்யமும் தேடாமலே கிடைத்தவன்.
கங்கை எப்படி அந்த நதியில் ஸ்நானம் செய்தவர்களை பரிசுத்தப் படுத்துகிறாளோ அதுபோல், துளசி மூன்று உலகங்களையும் பரிசுத்தமாக்குபவள். துளசி செடி அருகே அமர்ந்து தியானிப்பவன் கிருஷ்ணனை எளிதில் அடைகிறான்.
துளசி செடி வளரும் வீட்டிலோ அருகிலோ கூட தீய சக்திகள் நெருங்குவதில்லை.
தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த ஒரு துண்டு துளசி தளத்தை புசிப்பவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாபம் விலகியவன்.
துளசி ஒரு தளத்தையாவது கிருஷ்ணனுக்கு அர்ச்சித்தவன் வைஷ்ணவன் ஆகிறான். துளசியை நமஸ்கரித்து கிருஷ்ணனை ஆராதிப்பவன் மீண்டும் தாய்ப்பால் குடிக்க நேரிடாதவன்.
துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின் முன்னோர்களும் கூட பாபத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். மீண்டும் ஜனன மரணம் இல்லாதவர்கள்.
சிவன்: ‘மகனே ஷண்முகா, இன்னும் துளசி மகிமை சொல்லிக்கொண்டே போகலாம். முடிவே இல்லை. புரிகிறதா?
பத்ம புராணத்தில் துளசி ஸ்தவ காண்டத்தில் ஒரு சம்பாஷணை:
ஒரு பிராமணன்; ”ஆச்சர்ய வியாச தேவா, இதுவரை எங்களுக்கு துளசி தேவி மகிமை சொன்னீர்கள். துளசியை போற்றும் துளசி ஸ்தவம் (பிரார்த்தனை) போதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’
வியாசர்; ”இதே கேள்வியை ரிஷி சதானந்த முனிவரிடம் அவரது சிஷ்யன் ஒருவன் கரம் கூப்பி பவ்யமாக கேட்டான். அப்போது அந்த
சிறந்த கிருஷ்ண பக்தர் சதானந்த முனிவர் என்ன சொன்னார் தெரியுமா?
”துளசி நாமம் சொன்னாலே போதும். கிருஷ்ணன் உன் பாங்களை தொலைத்து விடுவான். துளசி செடியை கண்ணால் பார்த்தாலே போதும். கோ தான பலன். துளசியை பூஜித்து ஸ்தோத்ரம் பண்ணுபவன், அவனே ஒரு விக்ரஹம். அவனையே மற்றவர்கள் கலியுகத்தில் வணங்க யோக்யமானவன்.
துளசி செடியை வீட்டில் வளர்த்தவனை யம தூதர்கள் வாசல் அருகே கூட வர முடியாதவர்களாக ஆக்கிவிடுவாள்.
‘ tulasi amrita janmasi sada twam keshava priya keshavartham chinomi twam varada bhava sobhane twadang sambhavai aniyam pujayami yatha hatim kalou mata vinashini’
எவனொருவன் துளசிஸ்தவ ஸ்தோத்ரம் சொல்லி துளசியை பறிக்கிறானோ, கிருஷ்ணனை துளசியால் அர்ச்சிக்கிறானோ அவன் புண்ய பலன் பல லக்ஷம் மடங்கு அதிகமாகும்.
துளசி ஸ்தவம் ஸ்தோத்ரம்
1 munayah sidha-gandharvah Patale nagarat svayam Prabhavam tava deveshi Gayanti sura-sattama முனிவர்களே, சித்தர்களே, காந்தர்வர்களே, பாதாள லோக நாக வாசிகளே, கணீரென்று கிருஷ்ணனை, துளசியை பாடுங்கள்.
2 na te prabhavam jananti devatah keshavadrite gunanam patimananutu kalpakotisha-tairapi உபதெய்வங்கள் பிரபாவத்தை, சக்தியை எத்தனை கோடியாக புகழ்ந்தாலும், கேசவனின் சக்திக்கும் மகிமைக்கும் அவை ஈடாகுமா.
3 krsna-anandat samudbhnutu kshiroda – mathanodyame
uttamange pura yena tulasi-vishnu na dhrita கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் பாற்கடல் கடையப்பட்டபோது துளசியை தனது சிரத்தில் விஷ்ணு தாங்கினார்.
4 prapyaitani tvaya devi vishno-rangani sarvashah pavitrata tvaya prapta tulasim tvam namamyaham
துளசி மாதா,நமஸ்காரங்கள். விஷ்ணுவின் சரீரத்தில் நீ சாற்றப்படும் போது, எல்லோரையும் நீ பரிசுத்தமாக்குபவள்.
5 tvadanga-sambhavaih patrai puja-yami yatha harim
tatha kurushva me vighna yato yami para gatim துளசி தேவி, உனது தளத்தால் நான் ஸ்ரீ ஹரி யை அர்ச்சிக்கும்போது எனக்கு ஒரு குறையும் தடையும் இல்லை. நான் தான் உன் பாதுகாப்பில் இருக்கிறேனே.
6 ropita gomati-tire svayam-krsnena palita jagaddhitaya tulasi gopinam hita-hetave துளசியம்மா, உன்னை செடியாக கோமதி நதிக்கரையில் வளர்த்து அந்த கிருஷ்ணன் உலகை ஸ்ரேஷ்டமாக்கி, கோபியரை ரக்ஷித்தான்.
7 vrindavane vicharata sevita vishnuna svayam gokulasya vivriddhyath kamsasya a nidhanaya cha துளசி தேவி, பிருந்தாவனத்தை செழிப்பாக்கவும், கம்சன் மற்ற ராக்ஷசர்களை அழிக்கவும், விஷ்ணுவுக்கு பக்க துணையாக இருந்தவளே நீ தானே. 8 vashishtha vachanat purvam ramen sarayu-tate
rakshasanam vadharthaya ropit-tvam jagat-priye ropita-tapaso vridhyai tulasi-tvam namamyaham துளசி மாதா,நீ சாமான்யமானவளா. சரயு நதிக்கரையில் வசிஷ்டர் அறிவுரையில் ராமன் உன்னை வளர்த்து தானே ராக்ஷசர்களை அழித்தார்.உனக்கு நமஸ்காரம். 9 viyoge raghavendra-sya dhyatva tvam janak atmaja ashokavana-madhye tu priyena saha-sangata அசோக வனத்தில் சீதா தேவி ராமனைப் பிரிந்து வாடும்போது, உன்னை அல்லவா த்யாநித்தாள். நீ அல்லவோ அவளுக்கு தெம்பை தந்தவள். 10 shankarartha pura devi parvatya tvam himalaye ropita sevita siddhyai tulasi-tvam namamyaham அம்மா துளசி, சிவ பிரானை அடைய, ஹிமகிரியில் உன்னைத்தானே வளர்த்து பார்வதி தேவி வணங்கினாள் . எங்கள் நமஸ் காரத்தையும் சமர்பிக்கிறோம். ஏற்றுக்கொள் 11 dharmaranye gayayam cha sevita pitribhih svayam sevita tulasi punya atmano hita-michhata அம்மா துளசி, கயாவிலே , தர்மாரண்யத்தில் பித்ருக்களை திருப்தி படுத்துபவளே. பரிசுத்த காரணி. உனக்கு நமஸ்காரங்கள். 12 ropita ramachandren sevita lakshmanena cha sitaya palita bhaktya tulasi-dandake vane துளசி தேவி, ஸ்ரீ ராமபிரான் உன்னை வளர்த்தார்,லக்ஷ்மணன் உன்னை வணங்கினான், தண்டகாரண்யத்தில் சீதை உன்னை வளர்த்து பூஜித்தாள் . உனக்கு நமஸ்காரங்கள். 13 trailokya-vyapini ganga yatha-shastre-shu giyate tathaiva tulasi devi drisyate sacharachare துளசி தேவி, உன் பெருமை அறிவோம். எப்படி கங்கை மூன்று லோகங்களிலும் புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே போல் சகல ஸ்தாவர ஜங்கம ஜீவர்களும் வணங்குபவள் நீ. 14. rishyamuke cha vasata kapirajen sevita tulasi balinashaya tarasangam-hetave அம்மா உன்னை வணங்கி தானே, ரிஷ்யமுக பர்வதத்தில் வானர ராஜன் சுக்ரீவன், வாலியை கொல்லவும், தாரையை அடையவும் முடிந்தது. உனக்கு நமஸ்காரங்கள் 15 pranamya tulasi-devi sagarot tkramanam kritam krit-karayah prahusthascha hanuman punaragataha ஹனுமான், உன்னை வணங்கியபிறகு தானே, சமுத்ரத்தை தாண்டினான், ராம கர்யத்தை வெற்றி கரமாக முடித்து திரும்பினான்.உனக்கு நமஸ்காரங்கள். 16 tulasi grahanam kritva vimukto yati patakaih athava munishardula brahma-hatyam-vyapohati துளசியை தொடுவதாலே, சகல பாபங்களும் விலகுகிறதே, பிரம்மஹத்தி தோஷமும் கூட தீருமே. ரிஷி திலகங்களும் நாடும் துளசி மாதா உனக்கு நமஸ்காரங்கள். 17 tulasi patra-galitam yastoyam-sirasa vahet ganga-snanam avapnoti dasha-dhenu phala-pradam ஒரே ஒரு துளசி தளத்தை ஜலத்தில் இட்டு, ஸ்நானம் செய்தவன்,கங்கா ஸ்நான பலனையும், பாத்து பசுக்களை தானம் செய்த புண்யமும் பெறுவானே. உனக்கு நமஸ்காரங்கள் தாயே. 18 prasid devi deveshi prasid hari vallabhe kshirod-mathanod bhute tulasi tvam namamyaham தேவ தேவிகளுக்குள் சிறந்தவளே, ஹரியின் பிராண வல்லபி, பாற்கடலில் பிறந்தவளே, எங்கள் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம். 19 dvadasyam jagare ratrou yah pathet tulasi stavam dvatrim-shadaperadhans cha kshamate tasya keshavah
துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை கிருஷ்ணன் அவன் செய்த பாபங்களை மன்னித்து அருகிறார். துளசிஸ்தவம் பிரார்த்தனை புஸ்தகம் இருக்கும் வீட்டில் துரதிர்ஷ்டம் இல்லை. ஏன் என்றால் அங்கே அதிர்ஷ்ட தேவதை குடி கொண்டவள்.துளசி ஸ்தவம் பாராயணம் செய்பவன் மனதில் கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் கிடையாதே.


Comments