top of page

Deivathin Kural ("தெய்வத்தின் குரல்")

பரோபகாரம் - பகுதி 35 _________

அந்திம நினைப்பின் முக்கியத்துவம்

தெய்வ நினைப்புடன் தூக்கம்

மோக்ஷத்துக்குக் குறுக்கு வழி

  • தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும்.

  • அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விடவேண்டும்.

  • வேறே நினைப்பு வரக்கூடாது.

  • சொல்லும்போது ஸுலபமாக இருக்கும்.

  • ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும்.

காமாக்ஷியோ,

நடராஜாவோ,

தக்ஷிணாமூர்த்தியோ,

வேங்கடரமண ஸ்வாமியோ,

முருகனோ --

எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

  • அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது அந்த இஷ்ட தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு

  • சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு,

  • அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால்,

  • 'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது ?

  • மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம் ?' என்றுதான் தோன்றும்.

  • ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும்;

  • அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

  • இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற சமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம்.

  • எல்லாம் அப்யாஸத்தில் விடாமுயற்சியில்தான் இருக்கிறது.

  • நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.

ஶ்ரீமஹாபெரியவா


bottom of page