அபிஷேகம்
- Nov 12, 2017
- 1 min read
இறைவனுக்கு பலவித அபிஷேகங்கள் கூறப்பட்டுள்ள போதிலும் சுத்த ஜலம் அபிஷேகமும் பெரும் புண்ணியத்தை தரவல்லது.
இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் சுத்தமான நீரில் சேர்க்கவேண்டி பொருட்களை காரணாகமம் என்று கூறுகின்றது.
"ஏலா லவங்கம் கர்பூரம் அகரும் சந்தனம் லகு,
அம்புஜம் சைவ தத்கோலம் கச்சோலம் ஹரிபேரகம், உசீரம் சம்பகம் கோஷ்டம் ஸ்நாநத்ரவ்ய மிதிஸ்மி ருதம், ஜலபாண்டே விநிக்ஷிப்ய ததம்பு வாசிதம் க்ரியாத்.
அபிஷேக ஜலத்தில் சேர்க்கவேண்டிய திரவ்யம், 1)ஏலக்காய். 2)லவங்கம், 3)பச்சை கற்பூரம். 4)அகில். 5)சந்தனம். 6)சிறுநாகப் பூ. 7)தாமரைப் பூ. 8)தக்கோலம். 9)கச்சோலம். 10)வெட்டிவேர். 11)விளாமிச்சைவேர். 12)சம்பக மொக்கு. 13)கோஷ்டம்
இவைகளை வகைக்கு சிறிதளவு அபிஷேக ஜலத்தில் கலந்து, சுவாமி அபிஷேகம் செய்திட இறைவன் ஆனந்தமடைவான்.
சிவார்ப்பணம்.


Comments